திருமணத்தில் கலந்து கொண்டால் பைக் பரிசு..! விருந்தினருக்கு இலவசமாக பைக் வழங்கி அசத்திய மணமக்கள்

Published : Jun 10, 2022, 08:44 AM IST
திருமணத்தில் கலந்து கொண்டால் பைக் பரிசு..! விருந்தினருக்கு இலவசமாக பைக் வழங்கி அசத்திய மணமக்கள்

சுருக்கம்

மதுரையில் திருமண நிகழ்விற்கு  வந்தவருக்கு 70 ஆயிரம் மதிப்புள்ள இருச்சக்கர வாகனத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மணமக்களை உறவினர்கள் பாராட்டி வருகின்றனர்

திருமணத்தில் கலந்து கொண்டால் பரிசு

திருமணம் ஆயிரம் காலத்து பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற பழமொழி கூறுவார்கள். அந்த வகையில் திருமணம் நிகழ்வில் மணமக்கள் மட்டும் மகிழ்ச்சி அடையாமல் திருமண நிகழ்வில்  கலந்துகொண்ட விருந்தினரும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என நினைத்து, திருமண வீட்டிற்கு வருபவர்களுக்கு  பரிசாக டிபன் பாக்ஸ், பழங்கள், தேங்காய் போன்றவை  வழங்குவார்கள் ஆனால் மதுரையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பைக் பரிசாக வழங்கப்பட்ட நிகழ்வு  பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் - ஜோதி பிரியா இருவருக்கும் திருமணம்  நடைபெற்றது. 

மகிழ்ச்சியில் உறவினர்கள்

இந்த திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். இருவீட்டாரின் சார்பிலும் திருமணத்திற்கு வருகை தந்த உறவினர் ஒருவருக்கு குலுக்கல் முறையில் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டி என்னும் இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படும் என இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் திருமண வீட்டிற்கு வருகை தந்த அனைவரும் தங்களது பெயர்களை எழுதி டோக்கன் கொடுத்தனர் .

பைக் பரிசாக வழங்கிய மணமக்கள்

பின்பு மணமக்கள் முன்னிலையில் டோக்கன்கள் குலுக்கப்பட்டது.  அப்போது திருமணத்திற்கு வந்த மதுரை  கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த அக்கிம் என்பவருக்கு இரண்டு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சம்பவம் மதுரையில் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

இதையும் படியுங்கள்

சொந்தக் காலில் நிற்காமல் மிஸ்டுகால் கொடுக்கும் கட்சி எதிர்க்கட்சியல்ல..! பாஜகவை கலாய்க்கும் கி.வீரமணி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!