ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..!

Published : Jun 10, 2022, 07:02 AM IST
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..!

சுருக்கம்

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஜூன் 7ம் தேதி முதல் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருந்தது. (No Work No Pay) என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியிருந்தது. 

ஆனாலும், எதையும் பொருட்படுத்தாமல் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றது. எனினும், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதன் மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, நியாய விலைக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Annamalai Strategy: விஜய் வழியில்.. திராவிட கட்சிகளுக்கு ஸ்கெட்ச் போடும் அண்ணாமலை.. கொக்கரிக்கும் ஆதரவாளர்கள்
மாரிதாஸை கொத்தாக தூக்கிய சைபர் கிரைம்! 😱 நடந்தது என்ன? | Youtuber Maridhas Arrest