27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Published : Jun 09, 2022, 05:41 PM IST
27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

சுருக்கம்

தமிழக்தில் 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக்தில் 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 27 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது. புக்யா சினேகப்ரியா எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சிறப்பு காவல்படை மதுரை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள பள்ளிக்கரணை துணை ஆணையராக ஜோஷ் தங்கையா நியமிக்கப்பட்டுள்ளார். இதுக்குறித்த தமிழக அரசின் அறிவிப்பி, புக்யா சினேகப்ரியா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சிறப்பு காவல்படை மதுரை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையராக ராஜாராம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் செய்தித்தாள் நிறுவன ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பண்டிகங்காதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையர் அகத்தில் உள்ள பள்ளிகரணை துணை ஆணையராக ஜோஸ் தங்கையா, மதுரை மாநகர காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக வனிதா, சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு 2 துணை ஆணையராக சக்திவேல், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் ஆரோக்கியம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி, சேலம் நகர தெற்கு துணை ஆணையர் லாவண்யா, திருச்சி நகர தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி உள்ளிட்ட 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!