LKG - UKG விவகாரம்.. திடீர் பல்டி அடித்த அமைச்சர்.. நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர் கூட்டணி..

By Thanalakshmi V  |  First Published Jun 9, 2022, 5:11 PM IST

அரசுப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளை மூடக்கூடாது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.  அரசுப்பள்ளிகளில் செயல்படும் LKG,UKG வகுப்புகளில் மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


அரசுப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளை மூடக்கூடாது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.  அரசுப்பள்ளிகளில் செயல்படும் LKG,UKG வகுப்புகளில் மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு அரசுப்பள்ளிகளில் இனி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி அல்லாமல், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க: அரசுப்பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி கிடையாது..அதிரடிஅறிவிப்பிற்கு காரணம் இதுதான்..பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

அதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டுமென்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர்களால் மழலையர் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இனி அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி செயல்படும். மேலும் இனி மழலையர் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையம் மூலமாக நடத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் அதிமுக, பாமக, தேமுதிக, தாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. அதாவது, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்த அவரது அறிவிப்பில்,”எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே அரசுப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளை மூடக்கூடாது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது. அரசுப்பள்ளிகளில் செயல்படும் LKG,UKG வகுப்புகளில் மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடரும்.. அறிவிப்பை திரும்ப பெற்ற அமைச்சர்..

click me!