நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 100 % நிறைவேற்றம்.. 14.40 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி.. அமைச்சர் தகவல்..

Published : Jun 09, 2022, 04:27 PM ISTUpdated : Jun 09, 2022, 05:54 PM IST
நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 100 % நிறைவேற்றம்.. 14.40 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி.. அமைச்சர் தகவல்..

சுருக்கம்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகள் 100% பேரும் பயனடைந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்களில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகள் 100% பேரும் பயனடைந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்களில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாக்குறுதி கொடுத்தப்படி, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கும் குறைவாக நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும்  நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களை கண்டறிவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் படிக்க: அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடரும்.. அறிவிப்பை திரும்ப பெற்ற அமைச்சர்..

அதன்படி நகை கடன் பெற்றவர்களின் பெயர் ,கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண்,ஆதார் எண், முகவரி ,அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் யாரெல்லாம் நகைக்கடன் தள்ளுப்படி பெற தகுதியில்லாதவர்கள் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதனையெல்லாம் கணக்கில் கொண்டு நகைக்கடன் தள்ளுப்படி தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யபட்டது. இதன்படி தகுதியான பயனாளிகளுக்கு அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார். 14 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க: இந்த 5 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. பள்ளி திறப்பு தள்ளிபோகுமா? சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு விளக்கம்

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!