இந்த 5 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. பள்ளி திறப்பு தள்ளிபோகுமா? சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு விளக்கம்

By vinoth kumar  |  First Published Jun 9, 2022, 2:23 PM IST

தடுப்பூசி போடாதவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 3 நாட்களாக சாதாரண காய்ச்சல், சளி இருந்தால் பரிசோதனை செய்ய கொள்ள வேண்டும். அப்படி அறிகுறி இருந்தால் வீட்டு தனிமை அல்லது மருத்துவமனை தனிமை.


சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

தடுப்பூசி போடாதவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 3 நாட்களாக சாதாரண காய்ச்சல், சளி இருந்தால் பரிசோதனை செய்ய கொள்ள வேண்டும். அப்படி அறிகுறி இருந்தால் வீட்டு தனிமை அல்லது மருத்துவமனை தனிமை. கொரோனா பாதிப்பு 200 கீழ் உள்ளது. பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது அரசு வழிமுறைகளைபின்பற்ற பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

undefined

தமிழகத்தில் வருகிற திங்கள் கிழமை ஒன்று முதல் 10 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!