திட்டங்கள் எல்லாம் காங்கிரஸோடதுதான்….ஆனால் பாஜக அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுது….வெளுத்து வாங்கும் குஷ்பு…

 
Published : Jul 02, 2017, 08:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
திட்டங்கள் எல்லாம் காங்கிரஸோடதுதான்….ஆனால் பாஜக அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுது….வெளுத்து வாங்கும் குஷ்பு…

சுருக்கம்

GST is congress scheme....Kushboo press meet

காங்கிரஸ் திட்டங்களை எல்லாம், பாஜக தான் கொண்டு வந்தது போல, ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகின்றனர் என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசி குஷ்பு, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி வேடிக்கையாகவும், காமெடியாகவும் தான் எல்லாராலும் பார்க்கப்படுகிறது என கூறினார்.

ஜிஎஸ்டி  வரியை, பாஜக  கொண்டு வந்தது போல, மோடி விளம்பரம் தேடுகிறார் என குறிப்பிட்ட குஷ்பு .காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டதாக கூறினார்.. 18 சதவீதத்துக்கு மேல் வரி விதித்தால், மிகப்பெரிய ஆபத்தாகி விடும் என, ராகுல் ஏற்கனவே கூறியதை சுட்டிக்காட்டிய குஷ்பு, ஆனால் பாஜக அந்த தவறை செய்திருக்கிறது என குறிப்பிட்டார்.

காங்கிரஸ், கட்சி ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது, மக்களின் சாதக, பாதகங்களை பார்த்துத் தான் முடிவெடுக்கும் என்றும்,  ஜி.எஸ்.டி., வரியால், பல அத்தியாவசிய பொருட்கள், ஏழை மக்களின் கைக்கு எட்டாத துாரத்துக்கு சென்று விடும் என்றும் கூறினார்.

இனி, ஊழல் நடக்காது; அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என, கூற முடியுமா? என பாஜகவால் கூற முடியுமா ? காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை எல்லாம், இவர்கள் கொண்டு வந்தது போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகின்றனர் என குஷ்பு குற்றம்சாட்டினார்.

PREV
click me!

Recommended Stories

ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு