ஜிஎஸ்டி யால் சமையல் சிலிண்டர்களின் விலை உயர்ந்தது…சமையலே மறந்துவிடுமா என புலம்பும் பெண்கள்….

First Published Jul 2, 2017, 7:00 AM IST
Highlights
cooking gas cylinder price hike


வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 14 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாடுகளுக்கு, 19 கிலோ எடை கொண்ட , சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும், சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது.

இந்நிலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்டதையடுத்து சென்னையில் கடந்த மாதம்  559 ரூபாய் .50 காசுகளுக்கு விற்பனையான வீட்டு சிலிண்டர் விலை, தற்போது, 14 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு  574 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்படுகின்றன.

ஜி.எஸ்.டி எனப்படும்  சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்ததையடுத்த வீட்டு சிலிண்டருக்கு, 5 சதவீதமும் வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு, 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வீடுகளுக்கு பணன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை 14 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

 

 

click me!