
தமிழக அரசுத் துறைகளில் துணை கலெக்டர், வணிக வரித்துறை அதிகாரிகள், டி.எஸ்.பி உள்ளிட்ட குரூப் 1 பதவிகளில் 85 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப்பதவிகளுக்கு ஆன்லைன் முலம் விண்ணப்பிக்க இன்றுடன் காலக் கெடு முடிவடைகிறது.
ஆனால் கடந்த வாரம் உருவான புயல், முதலமைச்சர் ஜெயல்லிதாவின் மறைவு போன்ற காரணங்களால் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது, இதனால் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்களுக்கு தாமதமானது.
இந்நிலையில் குரூப் 1 தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை வரும் 12 ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடுஅரசு தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.