10ஆம் தேதியோடு - ரயில் நிலையத்திலும் பழைய நோட்டுகள் பெறப்படாது....!!!

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 06:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
10ஆம் தேதியோடு -  ரயில் நிலையத்திலும் பழைய நோட்டுகள் பெறப்படாது....!!!

சுருக்கம்

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக  500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அத்திய அறிவித்தது. ஆனாலும் சில அத்தியாவசிய தேவைகளுக்காக பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களுக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் வரும் 15 ம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு சிலர் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ரயிலுக்கு மொத்தமாக முன்பதிவு செய்து கொள்வதாகவும், பின்னர் அந்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது போன்ற முறைகேடுகளை களைவதற்காக ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் செலுத்த பழைய ரூபாய் நோட்டுக்கள் வரும் 10 ஆம் தேதி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி