சென்னையில் இரண்டே வருடங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும்: நிதி ஆயோக் எச்சரிக்கை

Asianet News Tamil  
Published : Jun 15, 2018, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
சென்னையில் இரண்டே வருடங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும்: நிதி ஆயோக் எச்சரிக்கை

சுருக்கம்

Groundwater will dry up in Chennai - Nidhi Aayog warning

பெங்களூரு மட்டுமின்றி 2020 ஆம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றிவிடும் என்று நிதி ஆயோக் அமைப்பு நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது

தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக மாறி வரும் நிலையில், இந்தியாவிலும் இது அபாயகரமான அளவை நோக்கி சென்று கொண்டுருக்கிறது.
மனிதனின் அன்றாட தேவைக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. குடிப்பதற்கே மக்கள் அல்லாடுகின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரைத்தைப் போலவே பெங்களூருவும் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போகிறது என்று கடந்த சில மாதங்களுக்கு
முன்பாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில், இந்தியா இதுவரை இல்லாத அளவு மிக மோசமான தண்ணீர் பிரச்சனையைச் சந்தித்து வருவதாகவும், பெங்களூரு மட்டுமன்றி சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றிவிடும் என்றும் நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது.

இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரம் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துடன் இணைந்து நிதி ஆயோக் அமைப்பு இந்தியா முழுவதும் நீர் வளம் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின்
முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் 60 கோடி இந்தியர்கள் தினந்தோறும் நீர் பற்றாக்குறையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 2 லட்சம் பேர் குடிப்பதற்கு
போதுமான நீர் இல்லாமல் இறந்து வருகின்றனர். இந்தியாவின் முக்கியமான 21 நகரங்களில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலத்தடிநீர் முற்றிலுமாக
தீர்ந்துவிடும். நீர் பற்றாக்குறையால் 100 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். 70 சதவீத நீர் மிகவும் அசுத்தமாகியுள்ளது என்று நிதி ஆயோக் ஆய்வு முடிவு
தெரிவிக்கிறது. பாதுகாப்பான நீர் பட்டியலில் 122 நாடுகளில் இந்தியா 120-வது இடத்திலுள்ளது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வளத்தைப் பாதுகாப்பதில் குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்றும் தமிழ்நாடு ஏழாவது
இடத்திலுள்ளது உள்ளது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா மாநிலங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும் நிதி ஆயோக் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அடிதூள்.. நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம்?
சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. 4ம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் மேடையேறும் அமித்ஷா..!