“படிச்சி முடிச்சா வேலை இல்ல என்ற பேச்சுக்கே இடமில்ல...” செம்ம ப்ளான் போடும் செங்கோட்டையன்

Asianet News Tamil  
Published : Jun 15, 2018, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
“படிச்சி முடிச்சா வேலை இல்ல என்ற  பேச்சுக்கே இடமில்ல...” செம்ம ப்ளான் போடும் செங்கோட்டையன்

சுருக்கம்

We are determined not to create a position that does not work

மாணவர்கள் எதிர்காலத்தில் தமிழகத்தில் பிளஸ் 2 முடித்தாலே மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்களின் மெட்ரோ மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சி.ஏ படிப்பு குறித்து இரண்டு நாள் கருத்தரங்குக்கு அழைத்தமைக்கு நன்றி. சி.ஏ. பயிற்சிக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர்கள் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளிக்க உள்ளனர். பட்டய கணக்காகளர் படிப்புக்கு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 25 நாட்களில் 75 இடங்களில் பயிற்சி அளிக்கப்படும். 

பயிற்சிக்காக பட்டய கணக்காளர் நிறுனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சி.ஏ. என்று சொல்லப்படும் ஆடிட்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், தமிழகத்தில் பொறியியல் படிப்பு முடித்து 1.60 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.

எனவே, படித்துவிட்டு வேலை இல்லை என்ற நிலையை உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். 12 ஆம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது. மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த நூலகத்தை தர வேண்டும் என்ற முறையில் அனைத்து மாவட்டங்களுக்கு நடமாடும் நூலகங்கள் மிக விரைவிலேயே ஏற்பாடு செய்யப்படவுள்ளது. 

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன. ஓட்டல் மேலாண்மை, மருத்துவமனை மேலாண்மைக்கு பயிற்சி வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு. அந்தந்த ஊர்களில் உள்ள தொழில்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பேசினார்.

மேலும், திருப்பூர் மாணவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி, ஆடை வடிவமைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். 412 மையங்களில் ஜூலை மாதம் முதல் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் பயிற்சிபெறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அடேங்கப்பா என்ன ஸ்பீடு..! வைகோவுக்கு 82 வயதா..? 28 வயதா..? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
நேருக்கு நேர் மோதல்.! எரிந்து எலும்புக்கூடான தனியார் பேருந்து..! எமனை எட்டி பார்த்து வந்த 23 பேர்! நடந்தது என்ன?