
தஞ்சாவூர்
கோயில் திருவிழாவுக்காக நடைப்பெற்ற ஆடல்,பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமாடிய எட்டு பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலை அடுத்த புலவர்நத்தம் கிராமம் கீழத்தெருவில் சியாமளாதேவி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் இரவு ஒரு நடனக் குழுவினரின் ஆடல், பாடல் நிகழ்ச்சி காவல்துறை அனுமதி பெறாமல் நடந்தது என்றும், நிகழ்ச்சியில் கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடினர் என்றும் புகார் வந்தது.
அப்போது சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் புலவர்நத்தம் கீழ்பாதிக்கு நேரில் சென்று ஆடல், பாடல் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனாலும் அதையும் மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.
இதுகுறித்து அம்மாப்பேட்டை காவலாளர்கள் வழக்குப்பதிந்து புலவர்நத்தம் கீழ்பாதியை சேர்ந்த நடேசன் (60), தர்மராஜ் (50), சங்கரன் (60), தங்கராஜ் (65), பெரியார் நகரைச் சேர்ந்த ஐயப்பன் (35), திருமங்கலக்கோட்டையை சேர்ந்த விஜயகாந்த் (32), ஆனைக்காரன் தெருவை சேர்ந்த பாலமுருகன் (33), தஞ்சை ஞானம் நகர் முதல் தெருவை சேர்ந்த சக்தி (26) ஆகிய எட்டு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.