மாடி வீடு கட்டினால் சாவு நிச்சயம்; இன்றுவரை மாடிவீடு கட்டாமல் வாழும் கிராம மக்கள்... 

Asianet News Tamil  
Published : Jun 15, 2018, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
மாடி வீடு கட்டினால் சாவு நிச்சயம்; இன்றுவரை மாடிவீடு கட்டாமல் வாழும் கிராம மக்கள்... 

சுருக்கம்

Death of a house Village villagers who are not up to date today ...

சிவகங்கை 

சிவகங்கையில் உள்ள எஸ்.கோவில்பட்டி கிராமத்தில் மாடி வீடு கட்டினால் உயிர் பலி ஏற்படுவதால் இந்தக் கிராமத்தில் யாரும் மாடு வீடு கட்டுவதில்லையாம். 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ளது எஸ்.கோவில்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் 2000 வீடுகள் உள்ளன. இங்கு ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த கிராமத்தின் காவல் தெய்வமாகவும், இந்த மக்களின் குலதெய்வமாகவும் செகுட்டு ஐயனார் உள்ளார். 

முன்பொரு காலத்தில் இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த காடாக இருந்தன. காட்டில் நிறைய மான், முயல், கீரிப்பிள்ளைகள் இருந்ததால் அவ்வப்போது வேட்டை நடைபெற்றது. அப்படி ஒருநாள் வேட்டை நடந்தபோது, மானை நோக்கி வேல்கம்பு எறியப்பட்டது. வேல்கம்பானது குறி தவறி அருகில் இருந்த புதரில் சிக்கிகொண்டது. வேல்கம்பை எடுப்பதற்காக சிலர் புதரின் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது, வேல்கம்பு ஒரு வள்ளிக்கிழங்கில் குத்தி நிலை கொண்டிருந்தது. வேல் கம்பை எடுத்தபோது, வள்ளிக்கிழங்கில் இருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், வள்ளிக்கிழங்கை மேலும் தோண்டியபோது உள்ளே ஐயனார் சிலை இருந்தது. வேல்கம்பு தாக்கியதால் ஐயனாரின் காது பாதிக்கப்பட்டு, ஐயனார் செவிடானார்.

இதனைக் கண்டு அஞ்சிய கிராம மக்கள் இனி எங்கள் கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு காது குத்தி அந்த காது துளையை பெரிதாக்கி அதில் ஈயத்தினால் ஆன வளையத்தை அணிந்து பரிகாரம் செய்வதாக ஐயனாரிடம் வேண்டிக் கொண்டனராம். 

அந்த வழக்கம் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இந்த காவல் தெய்வம் தரையில் வீற்றிருப்பதால் அவரை விட உயரமான நிலையில் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த கிராமமக்கள் மாடி வீடுகளை கட்டுவதில்லை என்றும், அவ்வாறு மீறி கட்டினால் அவர்கள் காவல் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி பல விதமான துன்பங்களை அனுபவித்து பின்னர் உயிர் பலி ஏற்படும் என்றும் இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த பழக்கவழக்கம் குறித்து எஸ்.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், "எங்கள் கிராமத்தில் உள்ள காவல் தெய்வம் செவிட்டு ஐயனார் பழங்காலத்தில் பூமிக்கு அடியில் தவம் இருந்து வந்தார். அப்போது எங்களது மூதாயர் காட்டு பகுதிக்கு வேட்டைக்கு சென்றபோது, அதில் ஒருவர் வீசிய வேல் கம்பானது அந்த பூமியில் குத்தி நின்றது. 

பின்னர் அங்கு சென்று பார்த்தபோது பூமியில் இருந்து இரத்தம் பீச்சியடித்தது. இதனால் அதனை தோண்டி பார்த்தபோது உள்ளே தவத்தில் இருந்த ஐயனாரின் காதில் இந்த வேல் கம்பு குத்தி அதில் இருந்து இரத்தம் வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து எங்களது வாரிசை தண்டிக்காமல் இருக்க நாங்கள் ஆண்டாண்டு காலம் எங்களது ஆண் வாரிசின் காதில் பெரிய துளையை ஏற்படுத்தி அதில் 'குணுக்கு' என்று அழைக்கப்படுகிற காதை பெரிதாக்கி வளையம் அணிவதாக வேண்டிக் கொண்டார்கள். இந்த வழக்கத்தை இன்றுவரை நாங்கள் காதில் பெரிய துளையை ஏற்படுத்தி வருகிறோம்.

ஆண் குழந்தை பிறந்த மூன்று மாத்தில் அந்த குழந்தைகளுக்கு காது குத்தி அதை பெரிய துளையாக்கி அதில் ஈயத்தினால் ஆன வளையம் அணிவிக்கப்படும். இவ்வாறு குத்தப்படும்போது கடும் விரதம் இருக்க வேண்டும். 

காது குத்திய பின்னர் மூன்று மாத காலம் அதில் புண் ஏற்படும். இதை குணப்படுத்துவதற்கு அதில் சிறிய வேம்புக்குச்சியை வைத்திருக்க வேண்டும். இந்த 3 மாத காலத்திற்குள் அந்த குழந்தையை அந்த குடும்பத்தார்கள் மட்டுமே தொட வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை தொட்டு கொஞ்சுவதற்கு இடமில்லை.

சில இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், அவர்களுக்கு காதில் ஏற்பட்ட இந்த பெரிய துளையினால் அரசு வேலை கிடைப்பதில்லை. ஆனாலும் நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. சில இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். 

இந்த ஐயனார் தரையில் இருப்பதால் எங்களது கிராமத்தில் கட்டப்படும் வீடுகள் தரைமட்டம் வரையில் இருந்துதான் இருக்கும். அதைவிட  மாடி வீடு எடுத்து அதில் தங்கினால் ஐயனாரைவிட உயரத்தில் இருக்க நேரிட்டு ஐயனாரின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். இதனால் அந்த குடும்பத்தில் உயிர்பலி ஏற்பட்டதும் உண்டு" என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி