ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும்.. கொந்தளிக்கும் சீமான்…

 
Published : May 22, 2017, 08:32 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும்.. கொந்தளிக்கும் சீமான்…

சுருக்கம்

Govt shold arrest the people who come to visit Jayalatha samathi

ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்பவர்களை கைது செய்ய வேண்டும்.. கொந்தளிக்கும் சீமான்…

மெரீனா கடற்கரையில் போக்குவரத்துக்கு இடையூராக, ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து தியானம் செய்பவர்களையும், அஞ்சலி செலுத்த வருபவர்களையும் கைது செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்ததது. இதையடுத்த நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே -17 இயக்கம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இயக்கங்கள் நேற்று தடையை மீறி நினைவஞ்சலி கூட்டம் நடத்த முயன்றனர்.

இதையடுத்து 300 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கடும்  கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மெரீனா கடற்கரை சாலையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் யார் யாரோ வந்து தியானம் செய்கிறேன் என்று சொல்லி போக்குவரத்து விதிகளை மீறுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

அவர்களை  எடப்பாடி அரசு கைது செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இலங்கைத் தமிழர் படுகொலைக்காக நினைவேந்தல் நடத்த முயன்றவர்களை ஜனநாயக விரோதமாக இந்த அரசு கைது செய்துள்ளதாக தெரிவித்த சீமான், அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!