கவர்னர் பதவி எந்த பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப்: ஸ்டாலின்

Published : May 03, 2025, 09:43 PM ISTUpdated : May 03, 2025, 10:13 PM IST
கவர்னர் பதவி எந்த பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப்: ஸ்டாலின்

சுருக்கம்

கவர்னருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், கவர்னர் பதவி ரப்பர் ஸ்டாம்ப் போன்றது என்றும் முதல்வர் பேசினார்.

கவர்னருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.

விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமான கி.வீரமணி தலைமை வகித்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

"உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு மூலம் பூனைக்கு மணி கட்டியுள்ளனர். கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்தது மிகப்பெரிய வெற்றி. ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளோம். பிரதமரின் உரிமையை ஜனாதிபதி எடுத்துக்கொண்டால் தாங்கி கொள்வாரா?

மக்கள்தான் சுயாட்சி நாயகர்கள்:

எந்த காலத்திலும் உரிமையை விட்டுத்தர மாட்டோம். தீர்ப்பு தந்த நம்பிக்கையோடு மாநில சுயாட்சியை மீடெடுக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம். இந்தியாவுக்கு இன்றைக்கு நான் முன் மாதிரியாக இருப்போம். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவிற்கு வாக்களித்த மக்கள்தான் சுயாட்சி நாயகர்கள்.

பாராட்டு விழா என்று யாராவது கேட்டால் நான் நேரம் அளிக்க மாட்டேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்பதால் பாராட்டு விழாவிற்கு நேரம் ஒதுக்கினேன். மத்திய அரசின் ஏஜெண்டாக உள்ள கவர்னர் திட்டங்களை தடுக்க முடியும் என்றால் மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன மரியாதை? கவர்னர் பதவி என்பது எந்த பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போன்றது"

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!