மாரடைப்பால் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி..! ஆளுநர் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை இரங்கல்

Published : Feb 19, 2023, 09:49 AM ISTUpdated : Feb 19, 2023, 09:50 AM IST
மாரடைப்பால் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி..! ஆளுநர் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை இரங்கல்

சுருக்கம்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மயில்சாமி மரணம்- இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்து வருகின்றனர். தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகைச்சுவை நடிகர் திரு.மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

Actor Mayilsamy passess away : பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

 

மயில்சாமி மறைவு பேரதிர்ச்சி

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அன்பு நண்பர் மயில்சாமி அவர்களை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் சரத்குமார் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

யார் இந்த மயில்சாமி..? நடிகராக மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டது ஏன்.?

 

PREV
click me!

Recommended Stories

ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!