அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளம்.. அமைச்சர் அன்பில் அதிரடி..

By Thanalakshmi VFirst Published Jun 3, 2022, 4:18 PM IST
Highlights

மாணவர்கள் பாட புத்தங்களை மட்டுமில்லாமல் மனித உரிமைகள், தன்னம்பிக்கையுடன் வாழ்வது, நிர்வாகத் திறமை, கலை இலக்கியம் உள்ளிடவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாணவர்களுக்கான புதியன விரும்பு என்ற தலைப்பில் 5 நாள் கோடை கால பயிற்சி முகாமை அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் "கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் ஆக்கும் முயற்சியில், மாணவ மாணவிகளின் தனித் திறமையினை வெளிக் கொணரும் விதமாக புதியன விரும்பு என்ற தமிழக அரசின் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். 

பள்ளி மாணவர்கள் பாடங்களை கற்பதை தாண்டி, மனித உரிமைகள், தன்னம்பிக்கையுடன் வாழ்வது, நிர்வாகத் திறமை, கலை இலக்கியம் உள்ளிடவற்றை கற்றுக்கொள்ளவும் தங்களுக்குள் மறைத்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொணரவும் இந்த 5 நாள் பயிற்சி முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்," அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம் என்றும் மலை மாவட்டங்களில் இலவச பேருந்து அட்டைகளுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படவுள்ளது என்றும் கூறினார். 

பழங்குடியின மாணவர்களுக்கு போதிய கல்வி கிடைக்க தேவையான விழிப்புணர்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. என்று அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், கல்வித்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள்..தலைமையாசிரியர் மீது நடவடிக்கை..பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

click me!