Week End ஸ்பெஷல்.. மிஸ் பண்ணிடாதீங்க.. சென்னையில் மலர்க் கண்காட்சி.. இன்னும் மூன்று நாட்கள் மட்டும் தான்..

By Thanalakshmi VFirst Published Jun 3, 2022, 3:02 PM IST
Highlights

சென்னையில் முதல்முறையாக மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த கண்காட்சியினர் தொடங்கி வைத்தார்.
 

சென்னையில் முதல்முறையாக மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த கண்காட்சியினர் தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த மலர்க் கண்காட்சியானது திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 200 க்கும் மேற்பட்ட வகையில் கண்ணை கவரும் மலர்கள் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

ஊட்டி , கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் மலர்களால் உருவாக்கப்பட்ட பறவைகள், விலங்குகள்,காய்கறிகளால் அமைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் செல்ஃபி எடுப்பதற்கான இடங்கள் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மலர்க் கண்காட்சிக்கான நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு தலா ரூ.50, மாணவர்களுக்கு தலா ரூ.20 என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சென்னையில் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Kalaignar: முதல்வருக்கு ஷாக் கொடுத்த சிறுவர்கள் To நெகிழ்ந்த தருணம் வரை - வைரல் போட்டோஸ் இதோ !

click me!