தமிழகத்தில் குரங்கு அம்மை? விளக்கம் அளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்!!

Published : Jun 03, 2022, 02:45 PM IST
தமிழகத்தில் குரங்கு அம்மை? விளக்கம் அளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 15 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எந்த குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 15 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எந்த குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 30 நாடுகளில் குரங்கு அம்மை நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 550 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 15 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில்  இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எந்த குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை. மே 20 முதல் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் பரிசோதனை தொடர்கிறது. இதுவரை 630 விமானங்களில் வந்த 1,15,332 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கொரோனாவுக்கு பின் இந்திய விமான போக்குவரத்துத்துறை சார்பில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தாக்கம் இதுவரை இல்லையென்றாலும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பரவிய கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் உள்ளனர். கொரோனா தொற்று இல்லாத கல்வி நிறுவனமாக ஐ.ஐ.டி., திகழ்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. வி.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். யாரும் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்போதெல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு 5 அல்லது 6 நாட்களிலேயே குணமாகிவிடுகின்றனர்.

கெட்டுப்போன இறைச்சி பயன்பாடை தொடர்ந்து அரசு கண்காணித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் தொடர்ந்து அணிவது நல்லது . விரைவில் இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும். சில தனியார் மருத்துவமனைகள் கருமுட்டை விற்பனையை சட்டவிரோதமாக மேற்கொள்வதாக எழுந்துள்ள புகார் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக கருமுட்டையை விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி