விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள்..தலைமையாசிரியர் மீது நடவடிக்கை..பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

By Thanalakshmi VFirst Published Jun 3, 2022, 3:39 PM IST
Highlights

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு , அதன்படி கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதியுடன் பொதுத்தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கும் போதுமான ஆசிரியர்கள் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் படிக்க: பள்ளிகள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை.! குதிரைகள் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு சமம்-அன்புமணி

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,” விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராமல் இருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு. விடைத்தாள் திருத்தும் பணிக்கு எவரேனும் வராமல் இருந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை அறிவிக்க ஏதுவாக ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: Week End ஸ்பெஷல்.. மிஸ் பண்ணிடாதீங்க.. சென்னையில் மலர்க் கண்காட்சி.. இன்னும் மூன்று நாட்கள் மட்டும் தான்..

click me!