
அரியலூர்
அரியலூரில், சென்னை மாவட்ட வருவாய் அலுவலரின் தொல்லையால், பணியின்போது உயிரிழந்த சென்னை பெரம்பூர் சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் மதன்பிரபு மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் பானுபிரியா முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் சரவணன் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “சென்னை மாவட்ட வருவாய் அலுவலரின் தொல்லையால், பணியின்போது உயிரிழந்த சென்னை பெரம்பூர் சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் மதன்பிரபு மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,
மதன்பிரபு குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அவரது சாவுக்கு காரணமான மாவட்ட வருவாய் அலுவலரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப்பட்டன. முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் செயற்குழு உறுப்பினர் காமராஜ் நன்றித் தெரிவித்தார்.