
விருதுநகர்
விருதுநகரில் தொகுப்பூதிய செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுப்பு ஊதியம் பெறும் செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாத்தூர் புதிய அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சாத்தூர் கிளை இணைச் செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளைச் செயலாளர் சேவியர் கண்டன உரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாரிமுத்து நிறைவுரையாற்றினார். இதில் சாத்தூர் அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் அரசு மருத்துவமனையின் தொகுப்பு ஊதிய செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.