சிறுவன் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு! இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவிப்பு

Published : Feb 22, 2024, 11:17 AM ISTUpdated : Feb 22, 2024, 11:28 AM IST
சிறுவன் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு! இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவிப்பு

சுருக்கம்

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் பிரவீன் குமார் (16) த/பெ.அன்பழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

விழுப்புரம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று (21.2.2024) மாலை TN-32-N-3938 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் பிரவீன் குமார் (16) த/பெ.அன்பழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இதையும் படிங்க: கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா தேதி அறிவிப்பு.! எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வன் வீனேஷ் (16) த/பெ.ஜெயராஜு என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க:  சுதீஷின் மனைவியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி.. இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்!

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Updates 07 December 2025: அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்
தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!