
மெரினா கடற்கரை சாலை பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த பெண் மீது தாறுமாறாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்தவர் அம்மு ரதி. இவர் மெரீனா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளி பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது கே.கே.நகரில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வந்து கொண்டிருந்த 12 G அரசுப் பேருந்து தாறுமாறாக ஓடி பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இதில் அம்மு ரதி, பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா சதுக்கம் காவல் துறையினர் அம்மு ரதியின் உடலை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.பேருந்தை ஓட்டுநர் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.