
சொத்துக்காக, மனைவியின் தாய்மாமனை கடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, ரிச் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கதிரவன், கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும், யூசுப், கதிரவனின் அக்கா மகளை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கதிரவன் வசிக்கும் வீட்டில், தனக்கும் உரிமை உள்ளது எனக்கூறி, யூசுப் பல மாதங்களாக சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை, கதிரவன் தன் வீட்டிற்கு அருகே நடந்து சென்ற போது, காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், கதிரவனை கடத்தி சென்றது.
கதிரவன் மனைவி அமுதா அளித்த புகாரின் பேரில், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இதனையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் சென்னை அடுத்து உள்ள மதுரவாயிலில் கார் டிரைவர் யூசுப் பிடிபட்டார்.
பிடிபட்ட கார் டிரைவரிடம் கடத்தப்பட்ட கதிரவன் கொலை கொலை செய்யப்பட்டாரா அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ளாரா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.