அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து... 10 பயணிகள் படுகாயம்!

Published : Dec 16, 2018, 03:16 PM IST
அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து... 10 பயணிகள் படுகாயம்!

சுருக்கம்

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பயணிகள் காயமடைந்துள்ளனர். 

சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு போளூர் நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு அருகே சென்றுக்கொண்டிருந்த போது பின்னால் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து மீது லாரி பலமாக மோதியது.  

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்