அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூலை 3ஆம் தேதி திறப்பு: உயர்கல்வித்துறை அறிவிப்பு

By SG Balan  |  First Published Jun 21, 2023, 5:27 PM IST

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 3ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகின்றன.


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 3ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலைக் கல்லூரிகளில் மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது." எனக் கூறப்பட்டுள்ளது.

Latest Videos

தமிழக அமைச்சர்களுக்கு குடும்ப வேலையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை - ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

மேலும், "இதுவரை 75,811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதம் உள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது" எனவும் உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பாக, வரும் ஜூன் 30ஆம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் என்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதியில் இருந்து வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சமஸ்கிருதம், இந்தியில் பட்டம் பெற்றவருக்கு தான் அரசு வேலையா? கொந்தளிக்கும் எம்.பி. சு.வெங்கடேசன்

click me!