
மதுரையில் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரண்டு உயர்மட்ட மேம்பாலங்களுக்கு, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களை சூட்ட மதுரை மாநகராட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே 52 கோடி ரூபாய் செலவில் 2 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம் இன்று திறந்து வைத்தார்.
மதுரை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த 2 பாலங்களும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இந்த பாலங்களுக்கு மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை சூட்ட வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, மதுரை, சிம்மக்கல் சாலை மற்றும் கோரிப்பாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரையும்,
அருள்தாஸ்புரம் மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளை இணைக்கும் உயர்மட்ட பாலத்திற்கு ஜெயலலிதா பெயரையும் சூட்ட , மதுரை மாநகராட்சி ஆணையருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.