
சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஆறு சர்வதேச விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளின் ஹேண்ட் பேக்குகள் சீல் வைத்து டேக் போடப்படுவது வழக்கம்.
பயணிகளின் கையட பேக்குகளை ஸ்கேன் செய்ய போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் இப்பழைய நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இதற்கிடையே விமான நிலைய நவீனப்படுத்துதல் திட்டத்தில் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக பயணிகளின் கைப்பைகளை சோதனையிட அதிநவீன ஸ்கேனர் இயந்திரங்கள் வாங்கப்பட்டு 6 விமான நிலையங்களிலும் பொறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சீல் மற்றும் டேக் செய்யப்படும் பழைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கேனர் இயந்திரங்களால் பயணிகள் சுதந்திரமான பாதுகாப்புச் சூழலை உணரலாம் என்று சி.ஐ.எஸ்.எப் இயக்குநர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.