
மதுரை சித்திரைத் திருவிழாவின் 11 ஆம் நாளான நேற்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டத்தின்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி வயதான பெண்ணிடம் இருந்து இளைஞர் ஒருவர் தங்க சங்கிலியை பறித்து சென்ற புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கள்ளழகர் மதுரை வந்ததையடுத்து, அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூன்றுமாவடியில், எதிர்கொண்டு அழைத்து சுவாமி தரிசனம் செய்தனர். அழகர்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திருமாலிருஞ்சோலையில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்பாடுடன் தொடங்கியது. அழகர்கோயிலில் இருந்து மதுரை வரை 435 மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள்கிறார்.
சித்திரைத் திருவிழாவின் 11 ஆம் நாளான நேற்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் வெகு பிமரிசையாக நடைபெற்றது. நேற்று மாலை 4.45 மணிக்கு
கள்ளழகர் தங்கப்பல்லக்கில் அழகர்கோயிலில் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தல் இருந்து பதினெடட்ம்படி கருப்பண்ணசாமி கோயில் வழியாக மதுரையை நோக்கிப் புறப்பட்டார். இதைத் தொடரந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் கள்ளழகர் காட்சி தந்தார்.
இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 6.30 மணிக்கு வடம் பிடித்துத் தொடங்கி வைக்கப்பட்ட தேர்த் திருவிழா, பிற்பகல் 1.30 மணியளவில் நிலைக்கு சென்றது. மாசி வீதிகளிலும் குவிந்திருந்த மக்கள் தேர்ததிருவிழாவை கண்டு ரசித்தனர்.
மக்கள் கூட்டம் மிகுந்திருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு வயதான பெண்மணி ஒருவரிடம், இளைஞர் ஒருவர், கழுத்து செயினை பிடுங்கிச் சென்றுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை போலீசார் வெளியிட்டு உள்ளனர். தேரோட்டத்தின்போது, பக்தர்களின் பாதுகாப்புக்கு என போலீசார் பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.