டாக்டர் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோவில் சிக்கிய மூன்று பெண்கள்! அழிக்கப்பட்ட வீடியோக்களை எடுக்கும் சைபர் க்ரைம்!

 
Published : Apr 29, 2018, 10:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
டாக்டர் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோவில் சிக்கிய மூன்று பெண்கள்! அழிக்கப்பட்ட வீடியோக்களை எடுக்கும் சைபர் க்ரைம்!

சுருக்கம்

Secret Inquiry With Sexual Trafficking Women

மைலாபூர் டாக்டரிடம் கைப்பற்றிய 2 செல்போன்களை ஆய்வு செய்த போது, 3 இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் மட்டும் இருந்தது. ஆனால் அழிக்கப்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் உதவியுடன் மீண்டும் எடுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெற வந்த பெண்களை ஆடைகளை கழற்றி ரகசியமாக வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் அந்த டாக்டரில் செல்போன், கம்பியூட்டர், லேப்டாபில் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர் இதில் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படம் சிக்கியுள்ளதாம்.

சென்னை மயிலாப்பூர் லோகநாதன் தெருவை சேர்ந்த டாக்டர் சிவகுருநாதனிடம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பெண் நெஞ்சுவலி காரணமாக சிவகுருநாதனிடம் சிகிச்சைக்கு வந்துள்ளனர். அப்போது டாக்டர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்த பெண்ணை மட்டும் சிகிச்சை அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தெரியாமல் அறையில் பெண்ணின் மேல் ஆடைகளை கழற்றி ஸ்டெதஸ்கோப் உதவியுடன் பரிசோதனை செய்வது போல் நடித்துள்ளார். அதை தனது செல்போனை ஆன் செய்து வீடியோ எடுத்துள்ளார்.

அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக உள்ளே நுழைந்த நபர் ஒருவர் திடீரென டாக்டரை தேடி அறைக்குள் நுழைந்துவிட்டார். அப்போது, மருத்துவர் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்துவிட்டார். வெளியே வந்த அந்த பெண்ணிடம், ‘‘உள்ளே என்ன நடந்தது’’ என்று வெளியில் காத்திருந்த நபர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், கதறி அழுதுள்ளார். உடனே அந்த நபர் டாக்டரிடம் கேட்டால், ‘‘இது வெறும் சிகிச்சைதான். இதை நீங்கள் தப்பா எடுத்துக்க கூடாது’’ என்று கிண்டலாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், டாக்டரின் செல்போனை பறித்து பார்த்துள்ளார். அப்போது அதில் சிகிச்சைக்கு வந்த ஏராளமான பெண்களிடம் இதுபோல தவறாக நடந்தது வெளிச்சமாகியுள்ளது. உடனே டாக்டர் அந்த செல்போனை பிடுங்கி அதில் இருந்த மெமரி கார்டை எடுத்து உடைத்து வெளியே வீசிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் நேரில் பார்த்த நபர் இருவரும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்படி, போலீசார் டாக்டரை பிடித்து அவரின் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆராய்ந்தனர். அப்போது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஒரு இளம்பெண் உட்பட இரண்டு பெண்களை சிகிச்சை என்ற பெயரில் ஆடைகளை கழற்ற சொல்லி அவர்களிடம் தவறாக நடக்கும் வீடியோ காட்சி இருந்துள்ளது.

இதனையடுத்து டாக்டரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, “டாக்டர் சிவகுருநாதன் சிகிச்சைக்கு வரும் பெண்களில் அழகான பெண்களின் மன நிலைப்படி அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனை சிகிச்சை அறையில் ஆன் செய்து வைத்து விட்டு, அவர்களிடம் சிகிச்சை என்ற பெயரில் தகாத முறையில் நடப்பது. மீண்டும் அந்த பெண்ணை முதல் நாள் எடுத்த வீடியோவை அந்த பெண்களிடம் காட்டி மருத்துவமனையில் உள்ள அறையிலேயே உல்லாசம் அனுபத்து வந்துள்ளார்.

இதனால் பல பெண்கள் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் நமக்குதான் பிரச்னை என்று மூடி மறைத்துள்ளனர். பெண்களின் மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டாக்டர் பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை படம் பிடித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இதையடுத்து, அந்த காமக் கொடூர டாக்டர் சிவகுருநாதன் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம், அடுத்தவரின் அனுமதியன்றி படம் எடுத்தல், மறைந்து ஆபாசமாக படம் எடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட டாக்டர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சைக்கு வந்த இளம் பெண்களை, மற்றும் திருமணமான குழந்தை இருக்கும் பெண்களை திட்டமிட்டு சீரழித்ததாக சுமார்  ௨௦க்கும் மேற்பட்டோர் பெண்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் டாக்டர் சிவகுருநாதன் மீது புகார் கொடுத்துள்ளனர். இதனைத் அடுத்து சிறையில் இருக்கும் சிவகுருநாதனை போலிஸ் காவலில் எடுத்து  விசாரணை நடத்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்  சிவகுருநாதனிடம் இருந்து கைப்பற்றிய 2 செல்போன்களை ஆய்வு செய்த போது, 3 இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் மட்டும் இருந்தது. மீதமுள்ள வீடியோக்களை அழித்துவிட்டதாக சிவகுருநாதன் வாக்குமூலத்தில் தெரிவித்தார். 

இதையடுத்து, அவரது செல்போனை போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் அழிக்கப்பட்ட வீடியோ மற்றும் தகவல்களை எடுத்து வருகின்றனர். டாக்டரால் உடைத்து எரியப்பட்ட மெமரி கார்டும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வீடியோவில் இருந்த 3 இளம் பெண்களிடம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் டாக்டர் குறித்து அளிக்கப்படும் தகவல்கள், மற்றும் பெண்களின் விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திவருநின்றனர்.

மேலும் டாக்டரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் அழிக்கப்பட்ட வீடியோக்கள் எடுக்கப்பட்டு அதில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் ஆன்லைன் மூலமும் புகார் அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புகார்கள் குவிந்து வருவதால் டாக்டர் சிவகுருநாதனை மேலும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!