கியா மோட்டார்ஸ் விவகாரம் - தமிழக அரசு விளக்கம்...

 
Published : May 11, 2017, 05:57 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
கியா மோட்டார்ஸ் விவகாரம் - தமிழக அரசு விளக்கம்...

சுருக்கம்

giya mottars not wayout from tamilnadu by government

தமிழகத்தில் இருந்து கியா மோட்டார்ஸ் வெளியேறியதாக வந்த செய்திக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் தென் கொரியாவை சேர்ந்தது.

ஜூலை 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு கியா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டது. மோட்டார் ஆலை தொடங்க அனைத்து வசதிகளும் செய்ய அரசு உறுதி அளித்தது.

தமிழகத்தில் இருந்து கியா மோட்டார்ஸ் வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கியா மோட்டார்ஸ் வேறு மாநிலத்திற்கு சென்றதாக வெளியான தகவல் தவறானது. சமூக வலைதளங்களில் வெளியான தகவல் பொய்யானது.

தமிழகத்தில் கியா மோட்டார் நிறுவனம் தொடங்காதது அதன் கொள்கை முடிவு.

ஏற்கனவே ஹுண்டாய் நிறுவனம் தமிழகத்தில் உள்ளதால் கியா நிறுவனம் வரவில்லை.

தமிழகத்தில் முதலீடு செய்ய பல புதிய தொழில் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

15 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் பி.எஸ்.ஏ தொழில் தொடங்க முன் வந்துள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் ஓசூரில் முதலீடு செய்ய பி.எஸ் ஏ நிறுவனம் முன் வந்துள்ளது.

புதிய தொழில் தொழில் நிறுவனங்களால் 6,500 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

ஹுண்டாய், யமகா இன்ஸ்ட்ருமென்ட்ஸ் செய்ய முதலீடு செய்கிறது.

வேதாந்தா, ஐடிசி, சியட், டையர்கள் ப்ரூடன்பர்க் முதலீடு செய்கிறது.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 23 December 2025: ரூ.18,000க்கு குட்பை.? அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் சம்பளம்.. சுட சுட வந்த அப்டேட்
தமிழ்நாடு என்ற பெயர் திமுகவிற்கு கசக்கிறதா..? இது தான் நீங்கள் தமிழை வளர்க்கும் முறையா..? சீமான் கேள்வி