மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் - இளைஞர்கள், பொதுமக்களுக்கு சிறுவன் ஆகாஷ் அழைப்பு

First Published May 11, 2017, 5:13 PM IST
Highlights
akash pressmeet about tasmac protest


மதுக்கடைகளுக்கு எதிராக நடக்கவிருக்கும் படிக்கும் போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று சிறுவன் ஆகாஷ் அழைப்பு விடுத்த்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படூர் கிராமத்தை சேர்த்தவர் சிறுவன் ஆகாஷ். இவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவது போராட்டம் வலுப்பெற்று கொண்டே வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிறுவன் ஆகாஷ் படூரில் புதிதாக திறக்கபட்டுள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராடி வருகிறார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்கள் ஊரில் மதுக்கடைகளே இதுநாள் வரை இல்லாமல் இருந்தது.ஆனால் திடீரென தற்போது ஒரு மதுக்கடையை திறந்துள்ளனர். இந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டேன்.

இதையடுத்து 2 நாட்கள் கடை மூடப்பட்டது. பின்னர், திரும்பவும் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.இந்த மதுக்கடைகளை எதிர்த்து வரும் மே 13 ஆம் தேதி நெடுஞ்சாலைகளில் படிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இதுகுறித்து தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!