சிறுமிகள் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை... ஆளுநர் குற்றச்சாட்டுக்கு டிஜிபி விளக்கம்!!

Published : May 05, 2023, 10:02 PM IST
சிறுமிகள் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை... ஆளுநர் குற்றச்சாட்டுக்கு டிஜிபி விளக்கம்!!

சுருக்கம்

சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பாக பரிசோதனைக்கு வந்த சிறுமிகள் தற்கொலை செய்ய முயற்சி என்பது தவறான தகவல் என்று ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். 

சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பாக பரிசோதனைக்கு வந்த சிறுமிகள் தற்கொலை செய்ய முயற்சி என்பது தவறான தகவல் என்று ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பழிவாங்கும் நோக்குடன் சமூக நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்சிதர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டுகள் வைத்ததாகவும், அதன் அடிப்படையில் உறவினர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், 6, 7ம் வகுப்பு மாணவியர் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் இரு விரல் கன்னி பரிசோதனை செய்ததாகவும், இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட வணிக வளாகம் முற்றுகை… போலீஸார் - எஸ்டிபிஐ கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு!!

இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் ஆகும். குழந்தைத் திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில் அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்த பின்னர், அதற்கான ஆதாரங்களை திரட்டிய பின்பு சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் ச/பி 366(A) இத.ச மற்றும் குழந்தை திருமண சட்டப் பிரிவு 9, 10இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றத்தில் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைபடி இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். ஆனால், அவர்களை இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

இதையும் படிங்க: விஏஓ கொலை செய்யப்பட்ட விவகாரம்... கைதான இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!!

அந்தச் சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல். அது போன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை. நான்கு குழைந்தை திருமணங்கள் நடந்தது உண்மை என்பதற்கும் ஆதாரங்கள் இருந்தன என்பதால் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது என்பது முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு ஆகும். அதோடு இதனால் சிறுமியர் சிலர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பதும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!
Election Dates 2026 தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம்..