காதலை கைவிடுமாறு காதலியின் பெற்றோர் மிரட்டல்; மனமுடைந்த காதலன் விஷம் குடித்து தற்கொலை...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 15, 2018, 9:13 AM IST
Highlights

திருவள்ளூரில், காதலை கைவிடுமாறு காதலியின் பெற்றொர் மிரட்டியதால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்டார். 

திருவள்ளூரில், காதலை கைவிடுமாறு காதலியின் பெற்றொர் மிரட்டியதால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்டார். மகனின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பொன்பாடி, மேட்டி காலனியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவில் அகிலா. இத்தம்பதியின் இரண்டாவது மகன் சக்திவேல். இவர் அரக்கோணம் தாலுகா, தணிகை போளூர் அருகேவுள்ள தனியார் கலைக் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

கல்லூரி விடுமுறை நாட்களில் பொன்பாடி காலனியைச் சேர்ந்தவரின் பால் ஏற்றிச் செல்லும் ஆட்டோவை ஓட்டிவந்துள்ளார் சக்திவேல். இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொன்பாடி காலனியில் உள்ள பாட்டி வீட்டில் வந்து தங்கியுள்ளார். ஆட்டோ ஓட்டிவரும்போது சக்திவேலுக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

ஏற்கனவே அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சக்திவேலுவுடன் காதல் என்பதை பெண்ணின் பெற்றோர் அறிந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து பெற்றோற் மற்றும் உறவினர்கள் போன வாரம் சக்திவேலை நேரில் வந்து காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளனர். இதில் மனமுடைந்த சக்திவேல் கடந்த சனிக்கிழமை விஷம் குடித்ஹ்து தற்கொலை செய்து கொண்டார். 

தான் காதலித்த பெண்ணை கைவிட வலியுறுத்தி பெண் வீட்டார் எச்சரித்ததே தன் சாவுக்கு காரணம் என்று தனது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துள்ளார் சக்திவேல். இதனையடுத்து சக்திவேலின் சாவுக்கு காரணமான பத்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரின் பெற்றோர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆத்திரமடைந்த சக்திவேலின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோற் திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சக்திவேலுவின் சாவுக்கு காரணமான பத்து பேரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காதலை கைவிட வலியுறுத்தி காதலியின் பெற்றொர் மிரட்டியதால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

click me!