உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..

Published : Jan 12, 2022, 02:26 PM IST
உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..

சுருக்கம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனை தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனை தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிவேல் என்கிற ராஜா (26). இவர், கடந்த ஆண்டு ஏம்பல் பகுதியில் சிறுமி ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். இதையடுத்து அவன்மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், கடந்த 2020 டிசம்பர் 29-ல் ராஜாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இவரது தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உறுதிப்படுத்த, புதுக்கோட்டை காவல்துறை தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை சரி என்று வாதிடப்பட்டதோடு, அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைத்தனர். இதனைத்தொடர்ந்து கீழமை நீதிமன்றம் முறையான விசாரணை செய்தே, தூக்குத் தண்டனை வழங்கி உள்ளது. எனவே, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!