ஆயிரம் விளக்கு இளம்பெண் கொலை... விபச்சார பெண் புரோக்கர் கைது

Asianet News Tamil  
Published : Nov 05, 2016, 01:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
ஆயிரம் விளக்கு இளம்பெண் கொலை... விபச்சார பெண் புரோக்கர் கைது

சுருக்கம்

சென்னை ஆயிரம் விளக்கில் கை, கால்களை கட்டி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த விபச்சார பெண் புரோக்கர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நகரில் தீபாவளி தொடங்கி அடுத்தடுத்து கொலை நடந்து வருவது போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கள்கிழமையன்று தி.நகர் ஹபிபுல்லா சாலையில் பங்களா வீட்டில் தனியே வசித்து வந்த கோடீஸ்வர பெண் சாந்தி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அதனையடுத்து நேற்று முன்தினம் குமரன் நகர் முத்தாரம்மன் கோவில் தெருவில் தனியாக வசித்த பெண் வக்கீல் லட்சுமி சுதா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

 இந்த 2 கொலை வழக்குகளிலும் இன்னும் கொலையாளிகள் யார் என தெரியவில்லை. போலீசார் தீவிர புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த இரண்டு கொலைகள் சென்னை நகரில் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் நேற்று ஆயிரம் விளக்கு பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண், உடலில் தீக்காயங்களுடன் வீட்டின் அருகில் சடலமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை ஆயிரம் விளக்கு, மேக்கீஸ் கார்டன், காளியம்மன் கோவில் 1வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 48). கடந்த 1ம் தேதியன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த தனலட்சுமி திடீரென காணாமல் போய் விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து பழனி ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

 போலீசார் தனலட்சுமியை தேடி வந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டின் எதிரே உடல் முழுவதும் தீக்காயங்களுடன் தனலட்சுமியின் உடல் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பழனி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். ஆயிரம் விளக்குபோலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

உடலில் பல இடங்களில் உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பியால் அடித்து தாக்கியதற்கான காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் தனலட்சுமியை அடித்துக் கொலை செய்து வீட்டு முன்பு வீசிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் உப்பிப்போய் இருந்ததால் கொலை நடந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர்.

பழனிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. தனலட்சுமியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2வதாக திருமணம் செய்துள்ளார். குழந்தைகள் இல்லை. பழனிக்கும், தனலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவரே தனலட்சுமியை அடித்துக் கொலை செய்துள்ளாரா என்பது  உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் இந்த கொலையில்  விபச்சார பெண் புரோக்கர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து விசாரணையில் பக்கத்து வீட்டு பெண் சுகந்தி மற்றும் யோவான் என்ற இரண்டு பேர்  கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுகந்தி அப்பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்ததும் , இதன் காரணமாக யோவான் அடிக்கடி வந்து சென்றதும் தெரியவந்தது. சுகந்தியின் எதிர்வீட்டில் குடியிருந்த கொலைசெய்யப்பட்ட தனலட்சுமி இதை கண்டித்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார். கடந்த 3நாட்களுக்கு முன்னாள் இதேபோன்றதொரு தகராறில் சுகந்தியும் , யோவானும் தனலட்சுமியை அடித்து கொன்று சுகந்தியின் வீட்டில் உடலை பதுக்கி வைத்துள்ளனர். 

தனலட்சுமி அடித்து கொலை செய்து விட்டு வீட்டிலேயே சடலத்தை விட்டினர். துர்நாற்றம் வீசாமல் இருக்க தனலட்சுமி உடலில் மிளகாய்பொடி தூவியும் வாசனை திரவியங்களை தெளித்தும் ஒரு நாள் முழுவதும் சுகந்தி வைத்திருந்துள்ளனர். ஆனால் உடலை எங்கும் வெளியே எடுத்து செல்ல முடியாத நிலையில் தவித்து வந்துள்ளனர்.

பின்னர் மனைவியை காணவில்லை என கணவர் பழனி ஆயிரம்விளக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபிறகு பயந்து போய் சடலத்தை வெளியே வீசி விட்டு சுகந்தி ஒன்றும் தெரியாதது போல இருந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. 

அவரது வீட்டில் இருந்து ரத்த கறைகள், தலைமுடி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

காணும் பொங்கல் திருநாளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிப்பு – குடும்பத்துடன் மகிழ்ச்சி !
அலங்காநல்லூரில் 1000 காளைகள் அவிழ்ப்பு.. 19 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசளிப்பு