
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு மேம்பாலத்தின் இருந்து ஏதோ விழுவதுபோல் திடீரென பெரும் சத்தம் கேட்டது.
இதை கேட்டதும், அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்களும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் என தெரிந்தது. அப்போது, சடலத்தை மேம்பாலத்தில் இருந்து வீசிவிட்டு, மர்மநபர்கள் சிலர் அங்கிருந்து தப்பியது தெரிந்தது.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலமாக கிடந்த இளம்பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார், கடத்தி கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.