மறு சீரமைக்கப்படுகிறது பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்… சட்டப்பேரவையில் அறிவித்தார் அமைச்சர் கீதா ஜீவன்!!

Published : Apr 17, 2023, 04:59 PM IST
மறு சீரமைக்கப்படுகிறது பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்… சட்டப்பேரவையில் அறிவித்தார் அமைச்சர் கீதா ஜீவன்!!

சுருக்கம்

திருச்சி, கோவை, சென்னையில் 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். 

திருச்சி, கோவை, சென்னையில் 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்து நிகழ் நேர பதிவுகளை மேற்கொள்ள 18,000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடியில் திறன் கைப்பேசிகள் வழங்கப்படும். குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் 18 ஆயிரம் குழந்தைகள் மையங்களுக்கு ரூ.14.85 கோடியில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: அம்பையில் பல் பிடுங்கிய விவகாரம்: ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு

சத்துணவு திட்டத்தின் கீழ் 17,312 பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு 25.70 கோடி ரூபாயில் புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும். சத்துணவு திட்டம், உள்ளக புகார் குழு மற்றும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க ரூ.50 லட்சத்தில் இணையதள முகப்பு மற்றும் செயலி உருவாக்கப்படும். சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.

இதையும் படிங்க: பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை; களத்தில் இறங்கி தூய்மை படுத்திய பெண் கவுன்சிலர்

30 ஆண்டுகளை கடந்த முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறு சீரமைக்கப்படும். சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர் ரக தையல் இயந்திரம் வழங்கப்படும். பாலியல் குற்றங்கள் அல்லாத பிற துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.50 லட்சத்திற்கு நிதி தொகுப்பு உருவாக்கப்படும். திருச்சி, கோவை, சென்னையில் 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!