நீங்க எங்க இருந்து வேண்டும் என்றாலும் ஆன் லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் !! அதிரடி எடப்பாடி !!

By Selvanayagam PFirst Published Mar 6, 2019, 10:08 AM IST
Highlights

தமிழ்நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டும் என்றாலும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் திட்டம் சென்னை மாநகராட்சியில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் பிறப்பு-இறப்பு சான்றுகள் இணைய தளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் ஒரே இணைய தளம் மூலம் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்யும் மென் பொருள் மக்கள் பயன்பாட்டுக்காக வந்துள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் எந்த பகுதியில் வசிக்கு மக்களும் பிறப்பு-இறப்பு சான்றிதழை எந்த ஒரு இ-சேவை மையத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கணினி மூலம் வீட்டில் இருந்தோ, அல்லது தனியார் மையங்களுக்கு சென்றோ பதிவிறக்கம் செய்யலாம். 

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தாலோ, அல்லது குழந்தை பிறந்ததை பதிவு செய் தாலோ 21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழை பெறலாம். கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப் படும். அதில் அவர்களுடைய வீட்டு விலாசம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொண்டாலும் இந்த பதிவு எண் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து குழந்தை பிறப்பு சான்றிதழை பெறலாம்.

தமிழகத்தில் தற்போது 99.5 சதவீத குழந்தைகள் மருத்துவமனைகளில்தான் பிறக்கின்றன. 23 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் இறக்கிறார்கள். இதற்கான பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை அந்தந்த மருத்துவமனைகள் மூலம் பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.

எனவே குறிப்பிட்ட ஆன்லைன் மூலம் முறைப்படி பதிவு செய்து இந்த சான்றிதழ்களை எந்த செலவும் இல்லாமல் எளிதாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ அரசு அறிவித்துள்ளது..

click me!