மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு; அதிக குறியீடுகள் பெற்று தமிழகம் தொடர்ந்து முதல் இடம்

By Velmurugan s  |  First Published Jul 31, 2023, 4:17 PM IST

மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் தமிழகத்தைச் சேர்ந்த 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.


இந்தியாவில் 450க்கும் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்களுக்கு தற்போது வரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சாவூரில் அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தைச் சேர்ந்த 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

புதுவையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கைது; கடைகள் அடைப்பு

அதன்படி திருவாண்ணாமலை மாவட்டம் ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, தஞ்சை, வீரமாங்குடி செடி புட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப் பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று தற்போது வரை 17 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை; வாழ்க திராவிட மாடல் அரசு - முன்னாள் அமைச்சர் விமர்சனம்

click me!