கோவைக்கே ஆபத்து.! கதி கலக்கும் டேங்கர் லாரி விபத்து.! கேஸ் கசிவால் திணறும் மக்கள்- பள்ளிகளுக்கு விடுமுறை

By Ajmal Khan  |  First Published Jan 3, 2025, 8:55 AM IST

கோவை அவிநாசி சாலையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து

தீயணைப்பு வீரரராக நடிகர் மம்முட்டி நடித்த திரைப்பம் ஒன்றில் வரும் காட்சியைப்போல் நிஜத்தில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பரபரப்புமிக்க கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த கேஸ் வெளியாகி வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அருகில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Tap to resize

Latest Videos

கோவை நகரின் முக்கிய சாலையான அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைந்து உள்ளது. கோவை நகரில் மிக முக்கிய இணைப்பு பாலமாக இது உள்ளது. இதில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கேஸ் குடோனுக்கு எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. 

விபத்து- எரிவாயு கசிவு

திடீரென லாரிக்கும் டேங்கருக்கும்  இடையிலான இணைப்பு அறுந்து டேங்கர் மட்டும் பாலத்தின்  சாலையில் விழுந்தது. அடுத்த சில நொடிகளில் விழுந்த வேகத்தில் டேங்கரில் பிளவு ஏற்பட்டது. இதனால் எரிவாயு வெளியேற தொடங்கியது. எந்த நேரத்திலும் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்ற நிலையில் அதிர்ச்சி அடைந்த டேங்கர் லாரி டிரைவர்கள் அலறி அடித்து தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். இதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்ட நிலையில், உடனடியாக மேம்பாலத்தில் மற்றும் சுற்று வட்டார சாலைகளில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் டேங்கர் லாரியில் குளுமைப்படுத்துவதற்காகவும், தீ பிடிக்காத வகையிலும் தண்ணீரை அடித்தனர்.  இதனையடுத்து தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின்  தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து டேங்கரை அங்கு இருந்து அகற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டர்.

விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் உள்ள எரிவாயுவு மற்றொரு டேங்கரில் மாற்றிய பிறகு தான் விபத்தில் சிக்கிய டேங்கரை அகற்ற முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காலி டேங்கரை கொண்டு வந்து மாற்றும் பணியானது தீவிரமாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சுற்றுப்பகுதிகளில் பாதுகாப்பு அலர்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  டேங்கர் லாரி அருகே செல்போன் பேச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

லீக்கை உடனே நிறுத்த நடவடிக்கை

வீட்டு உபயோக சிலிண்டர் 14- 19 கிலோவாக  இருக்கும் நிலையில் இது சுமார் 20 மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்ட அளவில் உள்ள டேங்கராகும், இந்தநிலையில் காற்றில்  எரிவாயு பரவிக் கொண்டு இருக்கும் நிலையில் முதற்கட்டமாக மட்டும் தண்ணீர் டேங்கர் மீது ஊற்றப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து வெளியாகும் எரிவாயுவை கட்டுப்படுத்தும் வகையில் 1 நிமிடத்தில் leak ஐ நிறுத்தும் வகையில் Resin hardner கொண்டு அடைக்கப்பட உள்ளது. இதனையடுத்து டேங்கரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கவுள்ளது. 

 

click me!