கந்தூரி சந்தனக்கூடு திருவிழா.. 45 கிலோ சந்தனக்கட்டைகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.. முதலமைச்சர் அறிவிப்பு

By Thanalakshmi VFirst Published Nov 2, 2022, 1:24 PM IST
Highlights

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவையான 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இன்று  தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர், நாகூர் தர்கா தலைவர் ஆகியோரிடம் வழங்கினார்.

 நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.

மேலும் படிக்க:அமைச்சர்னா வானத்தில் இருந்து வந்து குதித்த தேவ தூதன் என்கிற நினைப்போ.. பொன்முடிக்கு எதிராக பொங்கும் மநீம..!
 
2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் , கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக் கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.  

இந்நிகழ்வில்,வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்க:பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு.. செவிலியர் பிரசவம் பார்த்ததால் விபரீதம்..? ஓசூர் அருகே அதிர்ச்சி..
        

click me!