சைக்கிள் வாங்க வைத்திருந்த சேமிப்பை கஜா நிவாரண நிதிக்கு கொடுத்த குட்டி தேவதை!

By vinoth kumar  |  First Published Dec 3, 2018, 5:43 PM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு சைக்கிள் வாங்குவதற்காக தன்னிடம் இருந்த 520 ரூபாயை நிவாரண நிதியாக அளித்துள்ளார். இந்த சிறுமிக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சைக்கிளை பரிசாக வழங்கினார்.


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு சைக்கிள் வாங்குவதற்காக தன்னிடம் இருந்த 520 ரூபாயை நிவாரண நிதியாக அளித்துள்ளார். இந்த சிறுமிக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சைக்கிளை பரிசாக வழங்கினார்.

முன்னதாக கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக வரலாறு காணாத சேதத்தை டெல்டா மாவட்டங்கள் சந்தித்துள்ளன. இதுவரை 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தொண்டு நிறுவனங்கள் மற்றும் சினிமா திரையுலகினர்கள் மற்றும் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர் உதவி செய்து வருகின்றனர்.  

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அக்சயாஸ்ரீ, தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்றுவருவதற்காக, சைக்கிள் வாங்க அவர் சேமித்து வைத்த 520 ரூபாயை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார். இந்த சிறுமிக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் மாணவி அக்சயாஸ்ரீயை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவிக்கு சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கினார்.

click me!