
பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த மறியல் நடக்கிறது.
இந்நிலையில் அனைத்து கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் இன்று , மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.