சினிமா காட்சிகள் அதிரடி ரத்து !!! ஜிஎஸ்டி க்கு கடும் எதிர்ப்பு...

Asianet News Tamil  
Published : Jul 03, 2017, 06:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
சினிமா காட்சிகள் அதிரடி ரத்து !!! ஜிஎஸ்டி க்கு கடும் எதிர்ப்பு...

சுருக்கம்

from today all cinema theatrea are closed due to GST

ஜிஎஸ்டியின் 28 % சேவை வரி, தமிழக அரசின் 30 % கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பு முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் தியேட்டர்கள் மூடப்படுகின்றன.

கடந்த 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 % ஜிஎஸ்டி  விதிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 % கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது.

இப்படி இரு பக்கங்களும் வரி விதிக்கப்பட்டுள்ளதால்  திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைச்துள்ளனர். இதையடுத்து,  கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இன்று  முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர்.



அதே நேரத்தில் தியேட்டர்களை மூடினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே போராட்டத்துக்கு ஆதரவு தர முடியாது என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்தார்.

திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.



இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று  முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூட முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

விஷால் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும்  தமிழகம் முழுவதும் உள்ள 1,000 திரையரங்குகளில் இன்று முதல் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

 

 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Today 18 January 2026: ரூ.75,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை டிஸ்கவுண்ட்.. 473 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் காரை யாருதான் வாங்கமாட்டாங்க
தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்