
ஈரோடு
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் முதலமைச்சர் பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடி பகுதியில்தான் அதிகம் பரவியுள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று சமூக நல்லிணக்க விழா நடைப்பெற்றது.
இந்த விழாவில் பங்கேற்க கோபி வந்த அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் மருத்துவர் என்.எச்.ஜவாஹிருல்லா விழா முடிந்ததும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியது:
“தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் முதலமைச்சர் பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடி பகுதியில்தான் அதிகம் பரவியுள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்?
மாட்டிறைச்சி விவகாரத்தில் இளைஞர்களை துன்புறுத்தப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.
மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
கதிராமங்கலத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. உடனே தமிழக அரசு தலையிட்டு எரிவாயு கசிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்