இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது !! இந்தியாவிலேயே முதன் முறையாக அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் ஃபேஸ் ரீடிங் அட்டெண்டஸ் !! செங்கோட்யைன் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Dec 8, 2018, 8:38 AM IST
Highlights

அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக  ஃபேஸ் ரீடிங் அட்டெண்டஸ்  எனப்படும் கேமரா மூலம் வருகைப் பதிவு நடைபெறும் என  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,

கோபி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் 800 மாணவ– மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.

இதில் பங்கேற்கபதற்காக நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பள்ளிக்கூட மாணவ– மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அடுத்த ஆண்டு முதல் பள்ளி திறக்கப்பட்ட 15 நாட்களுக்குள் மடிக்கணினி, விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வித்துறையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருதாகவும் , இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மாணவ– மாணவிகளின் வருகையை ‘பேஸ் ரீடிங்’ (இன்ப்ரா ரெட் கதிர் வீச்சு மூலம் கண் கருவிழிகள் சென்சார் செய்யப்படும்) முறையில் பதிவு மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதன் முதல்கட்டமாக சென்னை அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 10 ஆம் தேதி  திங்கட்கிழமை தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்..

பாடப்பபுத்தகங்கள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்பட்டும் என்றும் புதிய சீருடைகள் தைப்பதில் அளவு மற்றும் தையலில் குறைபாடுகள் களையப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 250 நடுநிலைப்பள்ளிக்கூடங்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடங்களாகவும், 200 உயர்நிலைப்பள்ளிக்கூடங்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

click me!