இலவசமாக ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபரகணங்கள்.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Aug 22, 2025, 11:07 AM IST
MEDICAL INSURANCE

சுருக்கம்

தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரையிலான நவீன செயற்கை அவயங்கள் இலவசமாக வழங்கப்படும்.

Free modern prosthetic limbs differently-abled : தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ; தமிழக அரசு சார்பில் மக்களுக்கு நன்மை பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்து கிறது. அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என பல திட்டங்கள் மக்களிடம் ஆதரவை பெற்றுள்ளுத. அந்த வகையில் தமிழ்நாடு அரசால் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், ஆரம்ப நிலையிலேயே நோய்களைக் கண்டறிந்து இலவச சிகிச்சை வழங்கவும் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய மருத்துவ திட்டமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் உள்ளது. இந்தத் திட்டமானது 2025 ஆகஸ்ட் 2-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

தமிழகம் முழுவதும் 1,256 உயர் மருத்துவ சேவை முகாம்களை நடத்தி, ஏழை மற்றும் எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனைகள் (ரத்த அணுக்கள் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாடு, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், காசநோய், தொழுநோய் பரிசோதனைகள்). பெண்களுக்கு கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் மாற்றுத்திறன் சதவீதத்தைக் கண்டறிந்து சான்றிதழ் வழங்குதல். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், மனநல பாதிப்பு, புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறப்பு கவனம். இலவச மருத்துவ பரிசோதனைகள் மூலம் 4,000 முதல் 15,000 ரூபாய் வரை செலவாகும் சோதனைகளை மக்கள் இலவசமாக பெறலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் 

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நலம் காக்கும்) ஸ்டாலின் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் சேவை பெறுவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50,000 முதல் ரூ. 2,00,000 வரையிலான நவீன செயற்கை அவயங்கள் இலவசமாக வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை அவயங்கள் பெறுவதற்கு தகுதிகளாக கை கால் இழந்த மாற்றுத்திறனாளிகளாக இருத்தல் வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் (NIDC/UDID).

தேவைப்படும் ஆவணங்கள்

ஆதார் அட்டை

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

வங்கிக்கணக்கு புத்தகம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!
வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!